Friday, April 4, 2025
தாம்பரம் - ராமேசுவரம் இடையே ஏப்.6-ஆம் தேதி முதல் புதிய ரயில்!!
தாம்பரம் - ராமேசுவரம் இடையே ஏப்.6-ஆம் தேதி முதல் புதிய ரயில்
இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.4) தொடங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
ராமேசுவரம் பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி
ஏப்.6-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு கூடுதலாக ஒரு
தினசரி புதிய ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி,
தாம்பரத்தில் இருந்து இரவு 6.10-க்கு புறப்படும் ரயில் (எண்: 16103) மறுநாள் காலை
5.40-க்கு ராமேசுவரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்
ரயில் மறுநாள் அதிகாலை 3.45-க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி,
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில்
நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.4) காலை 8 மணிக்கு
தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.