முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி தீவிரம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

 

தமிழக அரசு சார்பில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும்

முழுகரும்பு,

ஒரு கிலோ பச்சரிசி,

ஒரு கிலோ சர்க்கரை

வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இவை 9ம் தேதி முதல் வழங்கப்படுவதையொட்டி ரேசன் கடை பணியாளர்கள் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் வருகின்றனர்.

 


நாளை மறுநாள் முதல் 13ம் தேதி வரை பொங்கல் பொருள் வழங்கப்படுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள 554 முழுநேர கடைகளுக்கும், 775 பகுதிநேர கடைகளுக்கும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் இறக்கும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.

 

மேலும் ரேசன் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுவதால், வழக்கமான உணவு பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதே ரேசன் கடைகள் களைகட்டி காணப்படுகிறது. மாவட்டத்தில் முழுநேர ரேசன் கடை 556, பகுதி நேர ரேசன் கடை 228 என 784 கடை உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 107 ரேசன் கார்டு தாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்று பயனடைவார்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.