Tuesday, July 9, 2024
இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான மகளிர் இறகுப்பந்து போட்டி!!
இராமநாதபுரம்
மாவட்டத்தில் பெண்களுக்கு இறகு பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான மகளிர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இராமநாதபுரம்
மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் VTeam(NGO)
- இணைந்து, 07.07.2024 (ஞாயிறுக்கிழமை) அன்று இராமநாதபுரம் SDAT உள் விளையாட்டு அரங்கத்தில்
சிறப்பாக நடத்தியது.
இப்போட்டிக்கு,
தலைமை விருந்தினராக திரு. துரை ஐ.பி.எஸ் அவர்கள்,
கெளரவ விருந்தினர்களாக திரு. M.தினேஷ் குமார் (மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்)
திரு. KBM நாகேந்திர சேதுபதி (ராஜா - இராமநாதபுரம் மற்றும் புரவலர் - இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்,
MMK முஹம்மது காசிம் மரைக்காயர் - பொறுப்பாளர் VTeam
மற்றும்
வள்ளல் காளிதாஸ் - இணைச்செயலாளர் இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்
ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த
போட்டி பள்ளி, கல்லூரி மற்றும்
பொது பிரிவு மகளிர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில்
70 பெண்கள் கலந்து கொண்டனர். 24 தனி நபர்களுக்கு முதல் பரிசு ரூ 3000 + கேடயம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ. 1500 + கேடயம் வழங்கப்பட்டது.
இறுதியில்
வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும், புரவலர்களுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தி:
கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளர்.