(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, October 18, 2024

வீடுகளில் நூலகம் அமைத்துள்ளவர்கள், தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி நபர் வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்துள்ள நபர்கள், தமிழக அரசின் விருது பெற வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் சி.பாலசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 

வீடுகள் தோறும் நூலகம் அமைத்து, வாசிப்பை மேம்படுத்தி வருவோரில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்வு செய்து விருது, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கேடயம், சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

 


இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட புத்தக ஆர்வலர்கள், தனி நபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர், தங்களது நூலகத்தில் உள்ளநூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் இடம் பெற்றுள்ளன, அரிய வகை நூல்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களுடன் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆகியவற்றைக் குறிப்பிட்டு

விண்ணப்பிக்கலாம்.

 

தகுதி உடையவர்கள்

 

ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர்,

மாவட்ட நூலக அலுவலம்,

டி-பிளாக் பேருந்து நிலையம்,

வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்- 623503

 

என்ற முகவரிக்கு நேரில் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும், விவரங்களுக்கு 9489108841 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment