Wednesday, August 14, 2024
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 17 "லஞ்ச" வழக்குகள், ரூ.4 லட்சத்துக்கு மேல் லஞ்சப்பணம் பறிமுதல்!!
ராமநாதபுரம்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு
துறை சார்பில் மாவட்டம் முழுவதும்
ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு
இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக
பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள்
மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கு திடீர்
சோதனையின் போது பணம் கைப்பற்றப்
பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும்
என 31 பேர் கைது செய்யப்பட்டுசிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து
ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக
மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக
பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட
துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கோரிக்கை
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல்
கடந்த ஆண்டு மாவட்டத்தில் லஞ்சம்
கேட்டு பெற்றதாக 5 வழக்குகளும், திடீர் சோதனையின் போது
8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த
சம்பவங்களில் மொத்தம் ரூ.97 லட்சத்து
55 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டு அந்த
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில்
பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும்
நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ
லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க
முன்வரவேண்டும். அவ்வாறு லஞ்சம் மற்றும்
ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும்
நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின்
குறைகள் உடனே தீர்த்து வைக்கப்ப
டும்.
மேலும்
பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம். அதன்படி
9498215697 மற்றும் 9498652159
ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட
தகவலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை
போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்