Tuesday, May 7, 2024
+2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீத தேர்ச்சி!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகம்
முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச்
22ம் தேதி முடிவடைந்தது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 63 மையங்களில்
71
அரசு மேல்நிலைப் பள்ளிகள்,
36
அரசு உதவி பெறும் பள்ளிகள்,
53
மெட்ரிக் பள்ளிகள்,
ராமநாதபுரம்
மாதிரி பள்ளி ஒன்று
என
161 பள்ளிகளிலிருந்து 6,302 மாணவர்களும், 7,247 மாணவிகளும் என மொத்தம் 13,549 பேர்
தேர்வு எழுதினர்.
இந்நிலையில்
நேற்று தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 5,850 மாணவர்கள், 7,007 மாணவிகள் என 12,857
பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில்
மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவிகள் 96.69 சதவீதம் என மொத்தம் 94.89 சதவீதம் தேர்ச்சி
பெற்றனர்.
இதில்
71 அரசு மேல்நிலை பள்ளிகளில் 19 பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகளும்,
53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37 பள்ளிகள் என மொத்தமுள்ள 161 பள்ளிகளில் 60 பள்ளிகள்
100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
No comments :
Post a Comment