Saturday, August 5, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய
மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார்
பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு
தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன்
வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,
இருப்பிடச்
சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தையல்
பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),
6
மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது
பிறப்புச் சான்று,
ஜாதிச்
சான்று,
கடவுச்
சீட்டு
விண்ணப்பதாரரின்
வண்ணப் புகைப்படம்-2,
விதவை,
கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,
ஆதார்
அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த
மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.