முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 22, 2023

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

 

அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை.

 


இது தவிர பெரும் பான்மையான மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

 

இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

எனவே அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.