Tuesday, August 29, 2023
ராமநாதபுரத்தில் வரும் 31-ந் தேதி மாராத்தான் போட்டி!!
மாவட்ட
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த
ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன.
தொடர்ந்து
மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில்
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும்
திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டி
காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ
மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
வெற்றிபெறும்
மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5
ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.
போட்டிகளில்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த
கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
Saturday, August 5, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய
மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார்
பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு
தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன்
வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,
இருப்பிடச்
சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தையல்
பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),
6
மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது
பிறப்புச் சான்று,
ஜாதிச்
சான்று,
கடவுச்
சீட்டு
விண்ணப்பதாரரின்
வண்ணப் புகைப்படம்-2,
விதவை,
கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,
ஆதார்
அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த
மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.