Monday, May 29, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம்
மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய
மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மதி
எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி
னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால்
கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள்
மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.
தேர்வு
செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு
உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு
மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில்
பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும்
விற்பனை சங்கத்திடமே இருக்கும்.
அங்காடி
நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ,
வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே
மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த
வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை
சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும்
உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு
மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு
பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற
31-ந் தேதிக்குள்
திட்ட
இயக்குநர்,
மகளிர்
திட்டம்,
கலெக்டர்
அலுவலகம் வளாகம்,
ராமநாதபுரம்
என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment