Friday, May 19, 2023
''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான
பணியாளர் தேர்வாணையம் (SSC),
ரயில்வே
தேர்வு வாரியம் (RRB),
வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS)
உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேற்கண்ட
மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள்
பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி
வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதில்
கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள்
வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
இது
குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment