முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 2, 2022

வீர தீர செயலுக்கான விருத்துக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

 

தமிழக அரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் மூலமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

 


இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதே போன்று, வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன்படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தை களிடமிருந்து விண்ணப்பங்கள் நவம்பவர் 30-ந் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

 

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலு வலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 24-ந் தேதி அன்று மாநில விருது வழங்கப்படும்.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.