Friday, September 30, 2022
ராமநாதபுரத்தில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி!!
மத்திய
அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா்,
வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம்
காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளங்கலை
பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி
வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த
போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்
நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன.
அதில்
சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ
அல்லது
94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற முதல்வருகு மனு!!
ஏர்வாடி
ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்
மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை
கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த
கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும்
சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும்
டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும்
வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
மற்றொரு
மதுபானக்கடை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர்
மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால்
மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர்.
இந்த
மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு
வெளியே கொண்டு செல்லவேண்டும்.
ஏர்வாடி
ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
ஏர்வாடி
ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.