Monday, September 19, 2022
பரமக்குடி, ராமநாதபுரத்தில் செப் 22, 23-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!!
பரமக்குடி,
ராமநாதபுரத்தில் வருகிற 22-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்
முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்
வகையில் அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற
உள்ளது.
அதன்படி
வருகிற 22-ந்தேதி அன்று பிற்பகல் 3 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்
23-ந்தேதி
அன்று காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில்
அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான
தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவும்,
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு
விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக
அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.