Friday, September 16, 2022
சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்!!
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்
வழங்கினார்.
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான
சைக்கிள் போட்டி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலையில்
இந்த சைக்கிள் போட்டிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
போட்டிகளில்
13, 15, 17வயது ஆண்கள், பெண்கள் 3 பிரிவுகளாக சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. இதில்
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு
போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும்,
2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும், 3-ம்
இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச்சான்றும் மற்றும் போட்டிகளில்
பங்கேற்று 4 முதல் 10-வது இடம் வரை வந்துள்ள நபர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்
தொகையும் பாராட்டு சான்றும் என மொத்தம் 60 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையை கலெக்டர்
ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.