Thursday, March 31, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம், ராமநாதபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாநிலம் மற்றும்
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான
கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில்
உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை
விருது வழங்கப்பட உள்ளது.
ஆகவே
2021-2022-ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய
அமைப்பாளர்களிடமும்,
ஊரக
பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.