முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 17, 2022

கீழக்கரையில் மார்ச் 27-ந்தேதிமாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கமும், முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து மாவட்ட அளவிலான 20-வது ஆண்டு சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டியை வரும் 27-ந்தேதி நடத்த உள்ளனர்.

 

ஆண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியிலும்,

பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் ராமநாதபுரம் முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும் நடைபெறுகிறது.

 


இதில் கலந்து கொள்ளக்கூடிய அணிகள் தங்களது விவரங்களை

24-ந்தேதிக்குள் 8148259600, 9943755116 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

போட்டிகள் அனைத்தும் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

 

இந்த தகவலை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ரமேஷ்பாபு, சுரேஷ்குமார் உடனிருந்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஏப்.,3 அன்று பரமக்குடியில் மாவட்ட பளுதுாக்கும் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அமெசூர் பளுதுாக்கும் சங்கம் சார்பில், ஏப்.,3 அன்று பரமக்குடியில் மாவட்ட போட்டிகள் நடக்கிறது.

 

2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட சீனியர் போட்டிகள் சவுராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.

 

இதில் 13 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.

 


பெண்கள் 45, 49, 55, 64, 77 கிலோ எடை பிரிவுகளிலும்,

ஆண்கள் போட்டிகளில் 55, 61, 67, 73, 81, 89, 96, 102, 109 மற்றும் 109 கிலோவிற்கு மேல் உள்ளவர்களும் பங்கேற்க முடியும்.

 

மேலும் போட்டிகள் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அன் ஜெர்க் முறையில் நடக்கிறது.

 

தகுதி உள்ளவர்கள் ஏப்.,1 அன்று இரவு 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் பரமக்குடி பாரதியார் உடற்பயிற்சி சாலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அனைத்துப் போட்டிகளுக்கும் உடல் எடை ஏப்.,3 அன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் எடுக்கப்படும் என, மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு 94882 88791ல் தொடர்பு கொள்ளலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.