Wednesday, March 2, 2022
நூறு சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கும்,நிகழ்ச்சி!!
ஆர்.எஸ்.மங்கலம்
வட்டார வேளாண்மை துறை சார்பில், பனை மேம்பாட்டு திட்ட இயக்கத்தின் கீழ், 100 சதவீத
மானியத்தில் பனை விதைகள் வழங்கும்,நிகழ்வு மேட்டு சோழதுாரில் நடைபெற்றது.
வேளாண்மை
துணை இயக்குனர் பாஸ்கரமணியன் விவசாயிகளுக்கு பனை விதைகளை வழங்கி, இத்திட்டம் குறித்து
கூறியதாவது:
ஆர்.எஸ்.மங்கலம்
வட்டாரத்தில், 15,000 பனை விதைகள், முழு மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட
உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்படுகிறது. நடவு குழியில்
2 பனை விதைகள்வீதம், மூன்று மீட்டர் இடைவெளி விட்டு பொருத்தமான ஈரப்பதத்துடன் பனை விதைகள்
நடவு செய்ய வேண்டும்.
விவசாயிகள்
தங்கள் வயல் வரப்புகள் மற்றும் பொது இடங்களில் பனை விதைகளை நடவு செய்யலாம். பனை மரங்கள்மூலம்,
மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. அதிகப்படியான மழை மற்றும் வெள்ள
காலங்களில், ஏரி கண்மாய் வாய்க்கால்களில் மண் அரிப்பினை தடுத்து பெரும் விபத்து தடுக்கப்படுகிறது.
உள்ளூர்
கிராம தொழிலாளர்கள், கைவினை கலைஞர்களுக்கு, வருவாய் தரும் வேலை வாய்ப்பினை அளிக்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தை அனைவரும் நடவு செய்து பாதுகாக்க வேண்டும்
என்றார்.
இதில்
வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:
தினசரிகள்