Tuesday, February 15, 2022
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 37 மாணவர்களுடன் வகுப்புகள் துவங்கியது!!
ராமநாதபுரம்
அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் 37 பேருடன்
திங்கள்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம்
அரசு மருத்துவக் கல்லூரி நடப்பு ஆண்டுக்கான (2022) மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையும்
தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
'நீட்'
தேர்வில் வென்றவர்கள் மூலம் தமிழக அரசின் 7.5 இடஒதுக்கீட்டில் 6 பேர் ராமநாதபுரம் அரசு
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். அகில இந்திய ஒதுக்கீடு இடமான 15 பேரில் 4 பேர்
கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்ந்தனர். மாநில அளவிலான இடஒதுக்கீட்டின்படி 27 பேர்
வரை சேர்ந்துள்ளனர்.
ராமநாதபுரம்
மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 71 பேர் வரை சேர கலந்தாய்வில் விருப்பம் தெரிவித்துள்ளநிலையில்,
அவர்களில் 37 பேர் நேரடியாக திங்கள்கிழமை தொடங்கிய வகுப்பறைகளுக்கு வந்தனர். அவர்களை
கல்லூரி முதன்மையர் எம்.அல்லி மற்றும் துணை முதன்மையர் எஸ்.அன்பரசி மற்றும் கண்காணிப்பாளர்
மலர்வண்ணன் ஆகியோர் வரவேற்று சான்றுகளை சரிபார்த்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரி
வேதியில், மயக்கவியல் துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பாடங்களை நடத்தினர்.
தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளிலும் இடம்
கிடைத்துள்ளன.
விடுதிக்
காப்பாளராக மருத்துவர் முகைதீன்பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவக் கல்லூரி
விடுதியில் மாணவர்களுக்கான தங்கும் அறைகள் உள்ளிட்டவற்றில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
கூறினார்.
கல்லூரியில்
ஓரிரு வாரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்து வகுப்புகள் முழுமையாக நடைபெறும்
என்றும், ஓரிரு நாள்களில் எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கான நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும்
மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தி: தினமணி