முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 31, 2022

ராமநாதபுரத்தில் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி!!!

No comments :

ராமநாதபுரத்தில் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 


ராமநாதபுரம் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்களுக்கு புகைப்படபோட்டியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி மற்றும் புகைப்பட போட்டியும் நடத்தப்படுகிறது.

 

இப்போட்டியில், ராமநாதபுரத்தில் காணப்படும் நீர்நிலைகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்போரின் கல்வித் தகுதி, முகவரி, கைப்பேசி எண்களை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

 

தெளிவான முகவரி இல்லாத படங்கள் நிராகரிக்கப்படும்.

 

இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா உதவி வனப்பாதுகாவலர்

சோ. கணேசலிங்கம் (கைப்பேசி எண்- 9442407750) மற்றும் ராமநாதபுரம் வன உயிரின வனச்சரக அலுவலர் பா. ஜெபஸ் (கைப்பேசி எண்- 9025056009) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.