(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 18, 2022

நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து

 

www.drbramnad.net

 

என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbramnad.net) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை கவனமாக கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிப்பது தொடர்பாக

 

https://youtube/G6c5e2ELJD8

 

என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

 

முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdsramnad@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04567-230950 வாயிலாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

 

இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment