(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, September 30, 2022

ராமநாதபுரத்தில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி!!

No comments :

மத்திய அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இளங்கலை பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 


இந்த போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன.

 

அதில் சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ

அல்லது 94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment