Friday, September 30, 2022
ராமநாதபுரத்தில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி!!
மத்திய
அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா்,
வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம்
காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளங்கலை
பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி
வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த
போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்
நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன.
அதில்
சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ
அல்லது
94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற முதல்வருகு மனு!!
ஏர்வாடி
ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்
மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை
கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த
கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும்
சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும்
டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும்
வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
மற்றொரு
மதுபானக்கடை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர்
மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால்
மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர்.
இந்த
மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு
வெளியே கொண்டு செல்லவேண்டும்.
ஏர்வாடி
ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
ஏர்வாடி
ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, September 28, 2022
ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை நியமனம் செய்ய கோரிக்கை!!
மாவட்ட
தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் மூன்று மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால்
வரி வசூல், நகர வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிதாக கமிஷனர்
நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்புகளில் ஆண்டுக்கு
ரூ.17கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் 25 சதவீதமாக சொத்துவரி, குடிநீர்,
பாதாள சாக்கடை, தொழில்வரி ஆகிய வரி வசூல் வெகுவாக குறைந்துள்ளது. நகராட்சியில் 157
பேர் பணியாற்றுகின்றனர். தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். மாதந்தோறும் ரூ.60 லட்சம்
வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
போதிய நிதியின்றி நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல்
முடிந்த பிறகு கமிஷனர் சந்திரா நீண்ட விடுப்பில் வெளியூர் சென்று விட்டார். இதனால்
கடந்த 3 மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. காரைக்குடி கமிஷனர் லட்சுமணன்
கூடுதல் பொறுப்பில் உள்ளார். இவரும் வாரத்தில் ஒருநாள் வந்து செல்கிறார்.
முழு
நேர கமிஷனர் இல்லாததால்,
நகராட்சி
வரி வசூல் மற்றும்
நகரில் ரூ.3 கோடி மதிப்பிலான டிஜிட்டல் நுாலகம் பணி, பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கம் பணி,
வீடுகளுக்கு குடிநீர் விநியோகம்,
பாதாளசாக்கடை செப்பனிடுதல்
உள்ளிட்ட நகர வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது
தலைவர் கார்மேகம் மேற்பார்வையில் ஊரணி வரத்து வாய்க்கால்களை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
இப்பணிகளை விரைந்து செயல்படுத்த ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை உடனடியாக நியமனம்
செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.
செய்தி: தின்சரிகள்
Monday, September 19, 2022
பரமக்குடி, ராமநாதபுரத்தில் செப் 22, 23-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!!
பரமக்குடி,
ராமநாதபுரத்தில் வருகிற 22-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்
முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்
வகையில் அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற
உள்ளது.
அதன்படி
வருகிற 22-ந்தேதி அன்று பிற்பகல் 3 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்
23-ந்தேதி
அன்று காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில்
அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான
தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவும்,
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு
விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக
அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Friday, September 16, 2022
சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்!!
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்
வழங்கினார்.
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான
சைக்கிள் போட்டி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலையில்
இந்த சைக்கிள் போட்டிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
போட்டிகளில்
13, 15, 17வயது ஆண்கள், பெண்கள் 3 பிரிவுகளாக சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. இதில்
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு
போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும்,
2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும், 3-ம்
இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச்சான்றும் மற்றும் போட்டிகளில்
பங்கேற்று 4 முதல் 10-வது இடம் வரை வந்துள்ள நபர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்
தொகையும் பாராட்டு சான்றும் என மொத்தம் 60 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையை கலெக்டர்
ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Wednesday, September 14, 2022
ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினர் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் ஜானிடாம்
வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார
மேம்பாட்டிற்காக, அப்பிரிவினைச் சேர்ந்த 10 பேர்களைக் கொண்ட குழுவினருக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில்
10 பேர் கொண்ட குழு அமைத்து ஆயுத்த
ஆடையக உற்பத்தி அலகு அமைப்போருக்கு ரூ.
3 லட்சம் நிதி அளிக்கப்படும் என
அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில்,
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண்கள் என
10 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கவேண்டும்.
அந்தக்
குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி பிரிவை அமைப்பதற்கான உபகரணங்கள் வாங்க ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்படும்.
குழு
உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு சிறு மற்றும் நடுத்தரத்
தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் உள்ள குழுவிற்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
விதவை,
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் உள்ள 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்பட்ட
வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினராக இருப்பதுடன், ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பது
அவசியம்.
பங்குகொள்ள
ஆர்வமுள்ளவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப்
பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Saturday, September 10, 2022
ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி!!
ராமநாதபுரத்தில்
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
போட்டி நடக்கிறது.
இதையொட்டி
மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராமநாதபுரத்தில் வருகிற
15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில்
13
வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர்.
15
வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள்
15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.
ராமநாதபுரம்
பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி
பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி
வர உள்ளனர். இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முதல்
3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு
முதல்
பரிசு ரூ.5 ஆயிரம்,
2-வது
பரிசு ரூ.3ஆயிரம்,
3-வது
பரிசு ரூ.2 ஆயிரம்,
4
முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.
இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!
சமூக
நீதிக்காக பாடுபவர்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது
பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
சமூக
நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செய்த பணிகள் மற்றும்
சாதனைகள் செய்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள்
கலெக்டருக்கு அனுப்பலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Friday, September 9, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 10ம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 10) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறும்
கிராமங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில்
சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,
வரும் சனிக்கிழமை (செப். 10) காலை 10 மணிக்கு
ராமநாதபுரம்
அச்சுந்தன்வயல் இசேவை மையம்,
ராமேசுவரம்
நடராஜபுரம் நியாயவிலைக்கடை,
திருவாடானை
பதனக்குடி நியாய விலைக்கடை,
பரமக்குடி
மஞ்சக்கொல்லை இ- சேவை மையம்,
முதுகுளத்தூர்
கொழுந்துறை இ- சேவை மையம்,
கடலாடி
நரிப்பையூர் நியாய விலைக்கடை,
கமுதி
கீழராமந்தி ஊராட்சிமன்றம்,
கீழக்கரை
குத்துக்கல்வலசை நியாய விலைக்கடை,
ஆர்.எஸ்.
மங்கலம் செங்குடி நியாயவிலைக் கடை
ஆகிய
இடங்களில் நடைபெறும். நியாய விலைக்கடைகளில் பொருள் பெற வர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும்
நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, September 2, 2022
பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்
வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்த நாளையொட்டி செப். 15, 17 ஆகிய
தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர்
மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
ராமநாதபுரம்
வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்றைய தேதிகளில் காலை
8.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு
முதல்
பரிசு ரூ.5 ஆயிரம்,
இரண்டாம்
பரிசு ரூ.3 ஆயிரம்,
மூன்றாம்
பரிசு ரூ.2 ஆயிரம்
வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும்
விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
அலுவலகத்தை நேரிலும், 9952280798 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.