Wednesday, July 6, 2022
மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசாக ரூ.10ஆயிரம்!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனித்துவ
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967ம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்
ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும்
பேச்சுப்போட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற
8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும்
மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே
முதல்
பரிசாக ரூ.10ஆயிரம்,
2-ம்
பரிசாக ரூ.7ஆயிரம்,
3-ம்
பரிசாக ரூ.5ஆயிரம்
மற்றும்
பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
10
தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்,
போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மொபைல் போன் வாயிலாகவோ (99522 80798) நேரிலோ அணுகலாம்.
No comments :
Post a Comment