முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, July 22, 2022

ராமநாதபுரம் மாவட்டம் சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடனை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக,



பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடனான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, July 20, 2022

வேளாண்மை இயந்திரங்கள் மானிய விலையில் வாங்க ஓர் அறிய வாய்ப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

விவசாயிகள் விளைவித்த பொருள்களை சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்புகளை குறைத்து சேமிப்புக்கால அளவை அதிகரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன.



எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு,

தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம்,

சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம்,

சிறிய வகை நெல் அரைவை எந்திரம்,

தானியம் அரைக்கும் இயந்திரம்,

நிலக்கடலை தோள் உரித்து வகை பிரிக்கும் எந்திரம்,

கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம்,

மாவரைக்கும் எந்திரம்,

தீவனம் அரைக்கும் எந்திரம்

 

ஆகியவை 40 சதவிகித மானியம் அல்லது அரசு நிா்ணயித்த உச்சவரம்புத் தொகையில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பிரிவு


மற்றும்


பரமக்குடியில் உள்ள வேளாண்மைப்பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, July 6, 2022

மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசாக ரூ.10ஆயிரம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967ம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே

முதல் பரிசாக ரூ.10ஆயிரம்,

2-ம் பரிசாக ரூ.7ஆயிரம்,

3-ம் பரிசாக ரூ.5ஆயிரம்

மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

10 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மொபைல் போன் வாயிலாகவோ (99522 80798) நேரிலோ அணுகலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை!!

No comments :

பரமக்குடி அரசினா் தொழிற்பயிற்சி மைய முதல்வா் குமரவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் அரசினா் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.



இவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மையங்களில் பற்ற வைப்பாளா் (வெல்டா்), தச்சா், கணினி இயக்குபவா், மின்காந்தவியலாளா், தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கம்மியா் மோட்டாா் வாகனம், பொருத்துநா், கடைசலா், மின்சாரப் பணியாளா், கம்பியான், பின்னலாடை தொழில் நுட்பவியலாளா், எந்திர பட வரையாளா், கம்மியா், மின்னணுவியல், குளிா்பதனம், தட்பவெப்பநிலை தொழில் நுட்பவியலாளா், எந்திர வேலையாளா் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

 

www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.