(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, June 3, 2022

மானியத்துடன் கூடிய "பம்ப் செட்" பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தமிழக அரசின் மானியத்துடன் கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் (பம்ப் செட்) பெறுவதற்கு விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் மானியத்துடன் கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

 

இத்திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் அடங்கல்

10-1, கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கிப்புத்தக முதல் பக்கம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

 


ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் கருவூல அலுவலகம் அருகேயுள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடியில் சௌகத் அலி தெருவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், இரண்டாவது தளத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலக செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பிக்கலாம்,

 

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment