Tuesday, June 21, 2022
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடம்!!
பிளஸ்-2
தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
5-வது இடமும் பெற்றுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பிளஸ்-2
மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால்
நேற்று வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 3-வது இடத்தை பிடித்து உள்ளனர்.
அதேபோல
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான தேர்ச்சி
சதவீதத்தில் 5-வது இடத்தை பிடித்து உள்ளனர்.
பிளஸ்-2
பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கி
28-ந்தேதி
வரை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,800 மாணவர்கள், 7,509 மாணவிகள் என
மொத்தம் 14,309 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 6,499 மாணவர்கள், 7,383
மாணவிகள் என மொத்தம் 13,882 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம்
வகுப்பு அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,133 மாணவர்களும் 8,226 மாணவிகளும் என
16,359 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,413 மாணவர்களும், 8,012 மாணவிகளும்
என மொத்தம் 15,425 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும்
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 32 மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
70 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,446 மாணவ, மாணவிகளில் 5,165 ேபர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அடுத்து வரும் பொதுத்தேர்வில் முதல் இடம் வருவதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்தார்.
No comments :
Post a Comment