(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 9, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஜூன் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெறுவதாக, ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வகை உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான அனைத்துத் துறை நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஜூன் 14 ஆம் தேதி காலை 10 முதல், மாவட்டத்தில் 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகின்றன.

 


அதன்படி,

ஜூன் 14 ஆம் தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

15 இல் பரமக்குடி,

16 இல் நயினார்கோவில்,

17 இல் முதுகுளத்தூர்,

18 இல் கமுதி,

21 இல் கடலாடி,

22 இல் ஆர்.எஸ்.மங்கலம்,

23 இல் திருவாடானை,

24 இல் திருப்புல்லாணி,

28 இல் மண்டபம்,

29 இல் ராமநாதபுரம்

 

ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

 

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டைப் பதிவு, முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும். எனவே,

 

இம்முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல், இருப்பிடச் சான்று நகல் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment