முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, June 24, 2022

ராமநாதபுரத்தில் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரத்தில் பட்டணம்காத்தான் பகுதியில் கட்டப்பட்டுள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் 28, 29 (செவ்வாய், புதன்) ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

 


வீடுகள் ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

 

நகர்ப்புற வீடற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.

இதில் பயனடைய விரும்புபவர்கள் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம்.

 

பயனாளிகள் ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையை செயற்பொறியாளர்,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 23, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 27ம் தேதி எரிவாயு முகவர்களுக்கான குறைதீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு முகவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளை மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

 


ஜூன் 27 மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.

அதில், எண்ணெய் நிறுவன நிர்வாகிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

எனவே, சமையல் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, June 22, 2022

ராமநாதபுரத்தில் ஜூன் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வழக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமானது, வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரான செ. மதுகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் முதல் பட்டதாரிகள் வரையில் தகுதிக்கு ஏற்ப தனியார் துறையினர் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றனர்.

 


இந்நிலையில், ஜூன் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாமை, வியாழக்கிழமை (ஜூன் 23) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வியாழக்கிழமை காலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், பொதுவான பொறியியல் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோ. ஜெகன் செவ்வாய்க்கிழமை விடுத்தள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோர் விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 


தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோருக்காக அமைக்கப்பட்ட 110 மையங்களில், இக்கல்லூரி வளாக மையமும் ஒன்றாகும். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

 

விண்ணப்பிக்க விரும்புவோர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கல்லூரிக்கு நேரில் வரவேண்டும். உரிய அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, June 21, 2022

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடம்!!

No comments :

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 5-வது இடமும் பெற்றுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

 

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால் நேற்று வெளியிடப்பட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 3-வது இடத்தை பிடித்து உள்ளனர்.

 


அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் 5-வது இடத்தை பிடித்து உள்ளனர்.

 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கி

28-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,800 மாணவர்கள், 7,509 மாணவிகள் என மொத்தம் 14,309 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 6,499 மாணவர்கள், 7,383 மாணவிகள் என மொத்தம் 13,882 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,133 மாணவர்களும் 8,226 மாணவிகளும் என 16,359 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,413 மாணவர்களும், 8,012 மாணவிகளும் என மொத்தம் 15,425 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

மேலும் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 32 மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 70 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,446 மாணவ, மாணவிகளில் 5,165 ேபர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

அடுத்து வரும் பொதுத்தேர்வில் முதல் இடம் வருவதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, June 18, 2022

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக திரு. ஜானிடாம் வர்கீஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்!!

No comments :

ராமநாதபுரம் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜானிடாம் வர்கீஸ் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

 

பணி பொறுப்பு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சங்கர்லால் குமாவத் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்டத்தின் 26-வது கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகலில் அவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

 


அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங் களும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு முழுமையாக போய் சேருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வேன். குறிப்பாக இந்த மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனை வருக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

 

ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் வளர்ந்து வரும் முன்னோடி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமநாதபுரம் மாவட் டத்தில் கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த மாவட்டத்தில் தலைநகரில் அரசுப்பள்ளி இல்லை என்பதால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்.

 

குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ள ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் துறையில் நான் பணியாற்றி வந்து உள்ளதால் அந்த துறையில் உள்ள திட்டங்களை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க செய்வேன்.

 

இவ்வாறு தெரிவித்தார். அப்போது கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி அலுவலர் வினோத் உடன் இருந்தனர்.

 

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, June 15, 2022

ராமநாதபுரத்தில் நடைபெறும் ”மொபைல் செர்வீஸ்” இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சியில் பங்கேற்ற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

மாவட்டத்தில் ஆண்களுக்கு கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி 30 நாள்கள் அளிக்கப்படவுள்ளது.



தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும்.

 

பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவதால், சேர விரும்புவோர் ஜூன் 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பூமாலை வணிக வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.

 

பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது முதல் 45 வயது வரையிலுள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம்.

 

மேலும் தகவல்களுக்கு 8056771986 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, June 14, 2022

கீழக்கரையில் நடைபெற்ற மின்னொளி ஜூனியர் வாலிபால் போட்டி!!

No comments :

கீழக்கரையில் ஜீனியர் மைஃபா முதல் வாலிபால் போட்டிகள் விமர்சையாக நடைபெற்றது, 20 அணிகள் கலந்து கொண்ட

இந்த போட்டியில் சித்தார்கோட்டை அணி முத்லிடம் பெற்றது.
மை ஃபா அணி இரண்டாம் இடத்தையும், மாயாகுளம் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது.





வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழ்ங்கி ஊக்கப்படுத்தினர். 


முதல் பரிசு ரூபாய் :5000
வழங்கியவர் மூர் டிராவல்ஸ் மற்றும் கண்மணி அலி;

இரண்டாம் பரிசு ரூபாய் : 3000
வழங்கியவர் பிளாக் & ஒயிட் லுங்கீஸ்  மற்றும் ST கொரியர்ஸ்;

 

மூன்றாம் பரிசு ரூபாய் :1000
வழங்கியவர் F2 ஃபேஷன்;







 

முதல் பரிசு சுளர் கோப்பை
வழங்கியவர் TS7 பூட்வேர் & மென்ஸ் வேர்;

 

இரண்டாம் பரிசு சூழற் கோப்பை
வழங்கியவர் HABIBI tarders

மூன்றாம் பரிசு வழங்கியவர் மலாய் ரெஸ்டாரன்ட்.


ஜெர்ஸி பனியன்கள் வழ்ங்கியவர்: க்ரெளன் ட்ரேடிங் ஏஜென்சி


விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.


செய்தி: கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளார்



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 9, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஜூன் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெறுவதாக, ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வகை உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான அனைத்துத் துறை நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஜூன் 14 ஆம் தேதி காலை 10 முதல், மாவட்டத்தில் 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகின்றன.

 


அதன்படி,

ஜூன் 14 ஆம் தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

15 இல் பரமக்குடி,

16 இல் நயினார்கோவில்,

17 இல் முதுகுளத்தூர்,

18 இல் கமுதி,

21 இல் கடலாடி,

22 இல் ஆர்.எஸ்.மங்கலம்,

23 இல் திருவாடானை,

24 இல் திருப்புல்லாணி,

28 இல் மண்டபம்,

29 இல் ராமநாதபுரம்

 

ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

 

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டைப் பதிவு, முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும். எனவே,

 

இம்முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல், இருப்பிடச் சான்று நகல் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து கலை, பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்திலுள்ள டிடிவிநாயகர் பள்ளி வளாகத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள், மாவட்டக் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறுகின்றன.

 

இப்போட்டிகளில் 17 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம், ஆகிய பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும்.

குழு போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை . தனிநபராக 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்தலாம்.

 


குரலிசைப் போட்டி, நாகசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்ஸஃபோன், கிளாரினெட், தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

 

மேலும், தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளில் சேருவோர் 5 தாளங்களில் வாசிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்.

 

பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்துவோர் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனம் ஆகியவை அனுமதிக்கப்படும்.

 

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், கலை, பண்பாட்டுத் துறை இணையதளத்தில் தங்களது பெயரை பதிவிடலாம். மேலும் தகவல்களுக்கு 98425 96563 என்ற கைப்பேசி அல்லது 94522 566420 என்ற மதுரையில் உள்ள கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, June 3, 2022

மானியத்துடன் கூடிய "பம்ப் செட்" பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தமிழக அரசின் மானியத்துடன் கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் (பம்ப் செட்) பெறுவதற்கு விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் மானியத்துடன் கூடிய மின்சார நீர் இறைப்பு இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

 

இத்திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் அடங்கல்

10-1, கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கிப்புத்தக முதல் பக்கம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

 


ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் கருவூல அலுவலகம் அருகேயுள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடியில் சௌகத் அலி தெருவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், இரண்டாவது தளத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலக செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பிக்கலாம்,

 

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.