Monday, November 14, 2022
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மை
மாணவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்,
சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு
உதவிபெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில்
2022-23 கல்வி ஆண்டில் 1-ம் முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல
11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி,
பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள்
உள்பட படிப்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும்
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற மத்திய அரசின்
www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
இதற்கான
கால அவகாசம் இந்த மாதம் 15 மற்றும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியான
மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும்,
பள்ளி
மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை
திட்டங்களுக்கு 30-ந்தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
வாய்ந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை
தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Monday, November 7, 2022
இராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வுகள்!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 பணி காலி
இடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு
வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்று தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த
தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை),
17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும்
2-ம்
நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022
(புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை)
ஆகிய
நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள
விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல்
மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாதிரி
தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விபரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேக்கம், தரமான சாலை அமைக்க கோரிக்கை!!
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின்
பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
கீழக்கரை
தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்
நடந்து செல்கின்றனர். தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான
வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில்
உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல
முடியாமல் அவதியடைகின்றனர்.
கீழக்கரை
நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த
நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித
நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி
உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில்
சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி: மாலை மலர்
Saturday, October 29, 2022
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் - நவ-11 விண்ணப்பிக்க கடைசி நாள் !!
அரசு
பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்
என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுமை
பெண் திட்டம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு படிக்கும்
மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதுவரை
2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை
பெற்று பயன் அடைந்து உள்ளனர். தற்போது இந்த வலைத்தளத்தில் www.pudhumaipenn.tn.gov.in
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
மாணவிகள்,
அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி
வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு
தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய
வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.
இத்திட்டத்தின்கீழ்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி
படிக்கும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
மாணவிகள்
ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,
3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின்,
சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை 91500
56809, 91500 56805, 91500 56801, 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்
Tuesday, October 18, 2022
நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு
நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடைகளில்
உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து
என்ற
இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை
5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை
பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான
குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல்
தொடர்பான விவரங்கருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்
(www.drbramnad.net) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான
அறிவுரைகளை கவனமாக கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும்
விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிப்பது தொடர்பாக
என்ற
வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
முறைகுறித்து
எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdsramnad@gmail.com என்ற இ-மெயில் மூலமும்,
உதவிமைய தொலைபேசி எண் 04567-230950 வாயிலாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை
அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்காணும்
வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை
5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, October 10, 2022
மயிலாடுதுறையில் ஓர் புதிய உதயம் ” மாஸ்டர் மெட்டல்ஸ்’’!!
மயிலாடுதுறை மாநகரில் நம் முகவை மைந்தர்களால் திறக்கப்பட்டிருக்கிறது ஓர் புதிய ஹார்டுவேர் & அலுமினியம் ஷோரூம்.
கட்டுமானத்தேவைகளுக்கான
எல்லா வகையான ஹார்டுவேர் கலெக்ஷன்ஸ்:
இண்டீரியர்
வேவைகளுக்குத்தேவையான அனைத்து வகையான அலுமினியம் & ஸ்டைன்லெஸ் ஸ்டீல் செக்ஷன்ஸ்:
அலுமினியம் ஏணிகள்:
போன்ற எல்லா வகையான ஹார்டுவேர்ஸ் பொருட்களும் கிடைக்கும்,
இந்நிறுவனத்தார்
கூறுகையில்,
மேற்கூறிய எல்லா பொருட்களும், நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் வழங்குவதோடு, விற்பனைக்கு
முன்னும் பின்னுமான வாடிக்கையாளார் சேவைகளும் வழங்கி வருகிறோம்.
எங்களிடம்
உள்ள அனுபவமிக்க ஃபேப்ரிகேட்டர்கள் மூலம், அலுமினியம் இண்டீரியர் வேலைகள் செய்து கொடுத்து
வருகிறோம்.
தொலைபேசி
/ வாட்ஸப் வழி ஆர்டர்களுக்கு தமிழகத்தின் எந்த பாகத்திற்கும் இலவச டோர் டெலிவரி செய்வதோடு,
விரைவில் பிரத்யேக ஆன்லைன் விற்பனைக்கான தயாரிப்புகள் செய்து வருகிறோம்.
தங்கள் அன்பான ஆதரவுகள் வழங்கி எங்கள்
வியாபாரத்திற்கு துணை நிற்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு
கூறினர்
நம்
முகவை முரசு சார்பாக நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள்!!
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Friday, October 7, 2022
கீழக்கரையில் நடைபெற்ற ஜூனியர் வாலிபால் போட்டிகள்!!
14
வயதுக்குட்பட்டவர்களுக்கான வாலிபால் போட்டிகள் புதுத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
6ம்
தேதி நடந்து முடிந்த நடந்த MYFA JUNIOR'S கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு
திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி
பெற்ற வீரர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்:
முதல்
பரிசு: கிழக்குத் தெரு டிப்போ
இரண்டாம்
பரிசு: Myfa Junior's
மூன்றாம்
பரிசு: ஏர்வாடி
பரிசு
வழங்கியவர்கள் விபரம்:
முதல்
பரிசு:3000
Al Asli Electronics
Hol Al Anz, Dubai
இரண்டாம்
பரிசு:2000
Formext Construction
Kilakarai
மூன்றாம்
பரிசு:1000
As Group
St Cargo
சிறப்பு
பரிசு:5000
Al Afia Tours & Travels
Kilakarai
கண்மணி
ஜமீல்(Myfa)
கீழக்கரை
Cup Sponsers:
Mr & Mrs Tailoring
Kilakarai
தகவல்:
பயிற்சியாளர் ஹமீது ராஜா.
வெற்றி பெற்ற
வீரர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
Monday, October 3, 2022
இராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டிகள்!!
இராமநாதபுரத்தில்
நடந்து மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் செலக்சன்-ல் சுமார் 80 விளையாட்டு வீரர்கள்
கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ராஜா
மேல்நிலை பள்ளியில் நடந்த இந்த போட்டியில், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியை சார்ந்த
மாணவர்கள்
Hameed Al Zehran 5 th standard,
Fahad
9 th standard,
Muwad
5 th standard,
கலந்து
கொண்டு வெற்றி பெற்று உள்ளார்கள்..
வெற்றி
பெற்ற அவர்கள் மாநில அளவில் ஈரோட்டில் அக்டோபர் 15, நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து
கொள்ள உள்ளார்கள்..
Coach
Name: மது பிரீதா, Roll Ball Association, Ramanathapuram....
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
Sunday, October 2, 2022
வீர தீர செயலுக்கான விருத்துக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
தமிழக
அரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்
தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்,
பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்,
பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும்
மூலமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017-ம் ஆண்டு
முதல் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி
வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய
பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான
காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதே போன்று, வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண்
குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன்படி)
மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தை களிடமிருந்து விண்ணப்பங்கள் நவம்பவர்
30-ந் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
விருதிற்கான
விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட
சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலு வலரிடம்
சமர்பிக்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன்
சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து
பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட, அனைத்து
தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 24-ந் தேதி அன்று மாநில
விருது வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Friday, September 30, 2022
ராமநாதபுரத்தில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி!!
மத்திய
அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா்,
வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம்
காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளங்கலை
பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி
வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த
போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்
நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன.
அதில்
சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ
அல்லது
94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற முதல்வருகு மனு!!
ஏர்வாடி
ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்
மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை
கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த
கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும்
சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும்
டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும்
வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
மற்றொரு
மதுபானக்கடை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர்
மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால்
மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர்.
இந்த
மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு
வெளியே கொண்டு செல்லவேண்டும்.
ஏர்வாடி
ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
ஏர்வாடி
ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, September 28, 2022
ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை நியமனம் செய்ய கோரிக்கை!!
மாவட்ட
தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் மூன்று மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால்
வரி வசூல், நகர வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிதாக கமிஷனர்
நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்புகளில் ஆண்டுக்கு
ரூ.17கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் 25 சதவீதமாக சொத்துவரி, குடிநீர்,
பாதாள சாக்கடை, தொழில்வரி ஆகிய வரி வசூல் வெகுவாக குறைந்துள்ளது. நகராட்சியில் 157
பேர் பணியாற்றுகின்றனர். தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். மாதந்தோறும் ரூ.60 லட்சம்
வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
போதிய நிதியின்றி நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல்
முடிந்த பிறகு கமிஷனர் சந்திரா நீண்ட விடுப்பில் வெளியூர் சென்று விட்டார். இதனால்
கடந்த 3 மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. காரைக்குடி கமிஷனர் லட்சுமணன்
கூடுதல் பொறுப்பில் உள்ளார். இவரும் வாரத்தில் ஒருநாள் வந்து செல்கிறார்.
முழு
நேர கமிஷனர் இல்லாததால்,
நகராட்சி
வரி வசூல் மற்றும்
நகரில் ரூ.3 கோடி மதிப்பிலான டிஜிட்டல் நுாலகம் பணி, பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கம் பணி,
வீடுகளுக்கு குடிநீர் விநியோகம்,
பாதாளசாக்கடை செப்பனிடுதல்
உள்ளிட்ட நகர வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது
தலைவர் கார்மேகம் மேற்பார்வையில் ஊரணி வரத்து வாய்க்கால்களை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
இப்பணிகளை விரைந்து செயல்படுத்த ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை உடனடியாக நியமனம்
செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.
செய்தி: தின்சரிகள்
Monday, September 19, 2022
பரமக்குடி, ராமநாதபுரத்தில் செப் 22, 23-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!!
பரமக்குடி,
ராமநாதபுரத்தில் வருகிற 22-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்
முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்
வகையில் அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற
உள்ளது.
அதன்படி
வருகிற 22-ந்தேதி அன்று பிற்பகல் 3 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்
23-ந்தேதி
அன்று காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில்
அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான
தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவும்,
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு
விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக
அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Friday, September 16, 2022
சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்!!
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்
வழங்கினார்.
ராமநாதபுரத்தில்
அண்ணா பிறந்த நாளையொட்டி விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான
சைக்கிள் போட்டி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலையில்
இந்த சைக்கிள் போட்டிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
போட்டிகளில்
13, 15, 17வயது ஆண்கள், பெண்கள் 3 பிரிவுகளாக சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. இதில்
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு
போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும்,
2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும், 3-ம்
இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச்சான்றும் மற்றும் போட்டிகளில்
பங்கேற்று 4 முதல் 10-வது இடம் வரை வந்துள்ள நபர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்
தொகையும் பாராட்டு சான்றும் என மொத்தம் 60 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையை கலெக்டர்
ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Wednesday, September 14, 2022
ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினர் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் ஜானிடாம்
வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார
மேம்பாட்டிற்காக, அப்பிரிவினைச் சேர்ந்த 10 பேர்களைக் கொண்ட குழுவினருக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில்
10 பேர் கொண்ட குழு அமைத்து ஆயுத்த
ஆடையக உற்பத்தி அலகு அமைப்போருக்கு ரூ.
3 லட்சம் நிதி அளிக்கப்படும் என
அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில்,
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண்கள் என
10 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கவேண்டும்.
அந்தக்
குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி பிரிவை அமைப்பதற்கான உபகரணங்கள் வாங்க ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்படும்.
குழு
உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு சிறு மற்றும் நடுத்தரத்
தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் உள்ள குழுவிற்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
விதவை,
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் உள்ள 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்பட்ட
வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினராக இருப்பதுடன், ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பது
அவசியம்.
பங்குகொள்ள
ஆர்வமுள்ளவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப்
பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Saturday, September 10, 2022
ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி!!
ராமநாதபுரத்தில்
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
போட்டி நடக்கிறது.
இதையொட்டி
மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராமநாதபுரத்தில் வருகிற
15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில்
13
வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர்.
15
வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள்
15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.
ராமநாதபுரம்
பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி
பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி
வர உள்ளனர். இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முதல்
3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு
முதல்
பரிசு ரூ.5 ஆயிரம்,
2-வது
பரிசு ரூ.3ஆயிரம்,
3-வது
பரிசு ரூ.2 ஆயிரம்,
4
முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.
இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!
சமூக
நீதிக்காக பாடுபவர்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது
பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
சமூக
நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செய்த பணிகள் மற்றும்
சாதனைகள் செய்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள்
கலெக்டருக்கு அனுப்பலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Friday, September 9, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 10ம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 10) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறும்
கிராமங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில்
சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,
வரும் சனிக்கிழமை (செப். 10) காலை 10 மணிக்கு
ராமநாதபுரம்
அச்சுந்தன்வயல் இசேவை மையம்,
ராமேசுவரம்
நடராஜபுரம் நியாயவிலைக்கடை,
திருவாடானை
பதனக்குடி நியாய விலைக்கடை,
பரமக்குடி
மஞ்சக்கொல்லை இ- சேவை மையம்,
முதுகுளத்தூர்
கொழுந்துறை இ- சேவை மையம்,
கடலாடி
நரிப்பையூர் நியாய விலைக்கடை,
கமுதி
கீழராமந்தி ஊராட்சிமன்றம்,
கீழக்கரை
குத்துக்கல்வலசை நியாய விலைக்கடை,
ஆர்.எஸ்.
மங்கலம் செங்குடி நியாயவிலைக் கடை
ஆகிய
இடங்களில் நடைபெறும். நியாய விலைக்கடைகளில் பொருள் பெற வர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும்
நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, September 2, 2022
பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்
வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், அண்ணா ஆகியோர் பிறந்த நாளையொட்டி செப். 15, 17 ஆகிய
தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர்
மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
ராமநாதபுரம்
வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்றைய தேதிகளில் காலை
8.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு
முதல்
பரிசு ரூ.5 ஆயிரம்,
இரண்டாம்
பரிசு ரூ.3 ஆயிரம்,
மூன்றாம்
பரிசு ரூ.2 ஆயிரம்
வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும்
விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
அலுவலகத்தை நேரிலும், 9952280798 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, August 23, 2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை, செப்-21 விண்ணப்பிக்க கடைசி நாள்!!
டிஎன்பிஎஸ்சி
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று
வெளியிட்டுள்ளது.
அதன்படி 4 பிரிவுகளில் தலைமை செயலக பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக 161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சட்டம்
மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 74 பேர்,
நிதித்துறையின்
தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 29 பேர்,
சட்டம்
மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் பணிக்கு 49 பேர்,
நிதித்துறைக்கான
தலைமை செயலக உதவியாளர் பிக்கு 9 பேர்
என
மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு
அலுவலர் (நிதித்துறை) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36,400 முதல்
ரூ.1,34,200 வரையும்,
சட்டம்
மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை
செயலக உதவியாளர் பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரையும் சம்பளம் கிடைக்கும்.
தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு
அலுவலர் (நிதித்துறை) பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், எஸ்சி,
எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நிதித்துறையை
தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு
விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும்
இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயதானது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில்
கணக்கீடு செய்யப்படும்.
தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), சட்டம் மற்றும் நிதித்துறையை
தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க
வேண்டும்.
தலைமை
செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிக்கு பிகாம் (B.com), பொருளாதாரம்
(Economics), புள்ளியியல் (Statistics) பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லுக்காக ரூ.150,
தேர்வு
கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி,
எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல்
முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர்
21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர்
26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Wednesday, August 10, 2022
வருகிற 13-ந் தேதி பொதுவினியோகத் திட்ட குறைதீர் முகாம்!!
தமிழக
அரசின் உத்தரவின் படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும்
ஒரு கிராமத்தில் சுழற்சிமுறையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு
வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட
உள்ளது.
ராமநாதபுரம்
தாலுகா-தேர்போகி ரேஷன் கடை,
ராமேசுவரம்
தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம்,
திருவாடானை
தாலுகா-கீழ்பனையூர் ரேஷன்கடை,
பரமக்குடி
தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை,
முதுகுளத்தூர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம்,
கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம்,
கமுதி தாலுகா- து.வாலசுப்பிர மணியபுரம் ரேஷன்கடை,
கீழக்கரை
தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம்,
ஆர்.எஸ்.
மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம்
ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
இந்த
கிராமங்களை சேர்த்த பொதுமக்களுக்கு
மின்னணு
குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல்,
குடும்ப
அட்டைகளில் பிழைத்திருத்தம்,
புகைப்படம்
பதிவேற்றம்,
பெயர்
சேர்த்தல், நீக்கல்,
முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல்
மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப
அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும்
ரேஷன் கடை களில் பொருள்பெறவருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட
பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல்
பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள்
குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை
விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி (சனிக்கி
ழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை
பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.