முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 12, 2021

கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.

 

இதுகுறித்து மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட சதுரங்க கழகம் செயல்படுகிறது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 15 முறை சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

 


வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளன. 7, 9, 11, 13, 15 மற்றும் 25 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

 

பதிவுக்கட்டணம் உண்டு. போட்டிக்கான நுழைவுப் படிவங்கள் பெற்றுக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக் கழகத் தலைவர் எஸ். சுந்தரம் 9443610956,

கீழக்கரை மருந்தகம் 04567-241885,

சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் (சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி) 9443 408 096 ,8248 207 198 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் சிவப்பு ரிப்பன் கழக அலுவலகத்தில் அளிக்கலாம். வரும் 15 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.

 

அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு!!

No comments :

தமிழக ஜூனியர் ஹாக்கி அணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

 

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11வது ஹாக்கி இந்தியா ஜூனியர் (ஆண்கள்) நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிவரும் டிச., 16 முதல் 25 வரை செயற்கை இழை மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

இப்போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு ராமநாதபுரத்தில் நவ.,1 2ல் நடந்தது. இதில் 30 பேர் தேர்வு செய்து அடுத்தக்கட்ட தேர்வு சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நவ., 15ல் முதல் டிச.9 வரை நடந்தது.



இம்முகாமில் 18 பேருக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாணவர்கள் பி. முரளிகிருஷ்ணன் மற்றும் ஆர்.மனோஜ் குமார் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.


மாணவர்களை, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் தலைவர் டாக்டர் மதுரம் துணைதலைவர் டாக்டர் அரவிந்த் ராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, வேலுமாணிக்கம் மனோகரன், செயலர் கிழவன்சேதுபதி மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.