Tuesday, December 7, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய மீன்
வளர்ப்பு குளங்கள் அமைக்கவும், மீன் வளர்க்கவும் மானியத் திட்டத்தில் நிதி பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக ஆட்சியர் சங்கர்லால்குமாவத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீன்வளர்ப்புக்கு
மானியம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் 100 ஹெக்டேரில் செயல்படுத்திட மத்திய அரசானது
ரூ. 69.88 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 0.5 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்து,
அதில்
பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 50 சதவிகித
மானியமும் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே
திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்
துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 340 சுகாதார பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தகவல்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற
340 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத்
தெரிவித்து உள்ளார்.
இது
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவம்
மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார
நிலையம் நலவாழ்வு மையங்களில் உள்ள
218
இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கும்,
122
பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்,
சுகாதார
ஆய்வாளர் பதவிக்கும்
ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு
தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.12.21 அன்று மாலை 5 மணிக்குள்
செயற்குழு
செயலாளர்,
மாவட்ட
நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை
இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
ஒருங்கிணைந்த
சுகாதார வளாகம்,
சிகில்
ராஜவீதி,
கேணிக்கரை,
ராமநாதபுரம்
என்ற
முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்
விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும இணையதளம் (https://nhm.tn.gov.in) மற்றும்
ராமநாதபுரம் மாவட்ட இணையதள (https://ramanathapuram.nic.in) வலைதளத்தில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் நேரில் அறிந்து கொள்ளலாம்
என தெரிவித்துள்ளார்.