Sunday, November 21, 2021
பெரியார் விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!!
பெரியார்
விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக
நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும்,
தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளர் மாநில முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
நடப்பு 2021 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க
பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே,
சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பணிகள் செய்தவர்கள்,
சாதனைகள் படைத்தவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பதாரரின்
சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்கான பணிகள் விவரம் உள்ளிட்டக்கியதாக
இருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள்
வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் வந்த சேர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:
தினசரிகள்