முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 19, 2021

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக திரு. சங்கர்லால் குமாவத் பொறுப்பேற்பு!!

No comments :

ராமநாதபுரம் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.

 

ராமநாதபுரம் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சந்திரகலா விடுமுறையில் சென்ற நிலையில் அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டராக சங்கர்லால் குமாவத் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 


முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவரை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நிருபர்களிடம் கூறிய தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்ட மக்கள் எளிமையானவர்கள், நல்ல உழைப்பாளிகள் என்பதை அறிந்து கொண்டேன். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக் காகவும், மக்களின் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கை களுக்காக எந்த நேரமும் தயங்காமல் என்னை நேரில் சந்திக்கலாம். 

 

இதற்காக எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும். அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டுசெல்ல பாடுபடுவதோடு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை கேட்டுப்பெற்று நிறைவேற்ற பாடுபடுவேன்.

 

இவ்வாறு கூறினார். கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

ராமநாதபுரம் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள ஹாதுஸ்யாம்ஜி கிராமத்தில் பிறந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளங்கலை உயிரியல் பட்டமும், முதுகலை வரலாறு பட்டமும் பெற்றவர். 2010-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி சப்-கலெக்டராக பணியாற்றியவர்.

 

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சியில் இணை ஆணையர் (கல்வி) மற்றும் வணிகவரித் துறையில் இணை ஆணையர் (பெரும் வரி செலுத்துவோர் பிரிவு) ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டு தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.