Wednesday, October 13, 2021
அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30 வரை நீட்டிப்பு!!
ராமநாதபுரம்
, பரமக்குடி, முதுகுளத்துார், ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில்
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் 2021ம் ஆண்டுக்கான
மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடந்தது. அதன்பிறகு காலியாக உள்ள அனைத்து
தொழிற்பிரிவுகளுக்கும் நேரடி மாணவர்சேர்க்கை அக்.,10 வரை நடந்தது, மேலும் அக்., 30
நீட்டிக்கப்பட்டுள்ளது.
எட்டு,
பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 14வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும்
பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை.
பயிற்சில்
சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ்,
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக வந்து காலியாக உள்ள தொழிற்பிரிவை
தேர்வு செய்யலாம்.
கல்வி
உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, அரசு சலுகைகள் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில்
பயிற்சிவழங்கப்படும் என மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக புகார் அளிக்க மொபைள் எண்கள் அறிவிப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார் அளிப்பதற்காக, அதிகாரிகளின்
செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது
குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆ.ம. காமாட்சி கணேசன் செவ்வாய்க்கிழமை விடுத்த
செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது வரை மாவட்டத்தில்
543 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதுவரை 1,08,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்துள்ளது.
தற்போது, நெல் 25 நாள்கள் பயிராக வளர்ந்துள்ளன.
இப்பயிருக்கு
அடியுரமாக இட யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள், கூட்டுறவு கடன்
சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனையாளர்களிடம் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில்
134 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 127 தனியார் உர விற்பனை நிலையங்கள்
உள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு ஏதுமில்லை.
யூரியா
2,416 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 1,240 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 172 மெட்ரிக் டன்னும்,
காம்ப்ளக்ஸ் 1,306 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 127 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு
கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளன.
விவசாயிக்கு
அதிகபட்சம் 5 மூட்டை உரங்கள் மட்டுமே விற்கவேண்டும்.
மாவட்டத்தில்
82 உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், விதி மீறிய 4 கடைகளுக்கு உர
விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உர
விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார்களை தெரிவிக்க, மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்
(தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) - 9443094193,
வேளாண்மை
அலுவலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) -9443861390. வட்டார அளவில் வேளாண்மை உதவி
இயக்குநர், ராமநாதபுரம் - 978856733,
வேளாண்மை
உதவி இயக்குநர் (திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி) - 9443226130,
வேளாண்மை
உதவி இயக்குநர் (திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம்) -9750052410,
வேளாண்மை
உதவி இயக்குநர் (பரமக்குடி) - 9443619721, வேளாண்மை உதவி இயக்குநர், (நயினார்கோவில்
மற்றும் சத்திரக்குடி) - 9443090564,
வேளாண்மை
உதவி இயக்குநர் (கமுதி) - 8870167153,
வேளாண்மை
உதவி இயக்குநர் (முதுகுளத்தூர்) - 9443642248, வேளாண்மை உதவி இயக்குநர் (கடலாடி)
-9942237653
ஆகிய
எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.