முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 29, 2021

மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

 

எனவே இதற்கான விண்ணப்பப்படிவங்களை மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று செப். 30 ஆம் தேதிக்குள்ளும், புதிதாக விண்ணப்பிப்போர் நவ. 5 ஆம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும்.

 

கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்,

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.