முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 16, 2021

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும்,

 

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ.3000 உதவித்தொகையும்,

 

9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கு ரூ. 4000 உதவித் தொகையும் மற்றும்

 


இளங்கலை பட்டப்படிப்புக்கு ரூ. 5000 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

 

அதேபோல, உயர்கல்வி (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) பயிலுவோருக்கு ரூ.7000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 

உதவித்தொகை பெறுவோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

 

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண்: 04567-231410-இல் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.