Sunday, June 13, 2021
10th மற்றும் +1 மாணவர்கள் மதிப்பெண் சான்றுகளில் பெயர், விவரங்கள் திருத்த கடைசி வாய்ப்பு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆம்
வகுப்பு மற்றும் பிளஸ் 1
மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் சான்றுகளில்
பெயர், விவரங்களை சரிபார்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் அனுப்ப
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கரோனா பொதுமுடக்கத்தையொட்டி தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்று மற்றும் மதிப்பெண்கள் வரும் 14 ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இதையடுத்து, மதிப்பெண், மாற்றுச்சான்றுகளை
பிழையின்றி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட மாணவர் பெயர் உள்ளிட்ட இதர விவரங்களை
கணினி மூலம் சரிபார்க்கவும், பின்னர் இறுதியாக சரிபார்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் அனுப்பவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர்கள்
தெரிவித்தனர்.
இதனிடையே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வரும் 14 ஆம் தேதி பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது
மாணவர் பெயர் விவரங்களை கணினியில் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அனைத்துப்
பாட ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.