Monday, May 3, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் வெற்றி கொண்டது திமுக கூட்டணி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மாவட்டத்தில்
பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள்
உள்ளன.
அதில்
திருவாடானை தொகுதியைத் தவிர மற்ற 3 தொகுதிகளிலும் திமுக நேரடியாகக் களம் கண்டது.
ராமநாதபுரம்
தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அதிமுக கூட்டணியான பாஜக வேட்பாளர்
து.குப்புராமை எதிர்த்துப் போட்டியிட்டார். இறுதியில் திமுக வேட்பாளர் 50,478 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ராமநாதபுரமும்
ஒன்று என்கிறார்கள் திமுகவினர்.
முதுகுளத்தூர்
தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் 1,01,901 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப்
போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி 81,180 வாக்குகள் பெற்றார். அதன்படி
திமுக வேட்பாளர் 20,721 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் தனித்தொகுதியான பரமக்குடியில் திமுக வேட்பாளர் முருகேசன் 84,864 வாக்குகள்
பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் 71,579 வாக்குகள்
பெற்றார். அதன்படி திமுக வேட்பாளர் 13,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவாடானை
தொகுதியின் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான கருமாணிக்கம் 77,347 வாக்குகள்
பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.சி.ஆணிமுத்து 64,031 வாக்குகள்
பெற்றார். அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த
15 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் திமுக நேரடியாகக்
களம் கண்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரம் சட்டப் பேரவையில் வெற்றி பெறும்
கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற மரபு கருத்து இத்தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.