Wednesday, April 7, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு
பாதுகாப்பும், கண்காணிப்பு காமிரா வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல்
அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இதுகுறித்து
செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டப்
பேரவைத் தொகுதிகளின் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
வாக்கு
பதிவு முடிந்த நிலையில், ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி
வளாகத்தில் 4 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கு
மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள்
உள்ள அறைகளில் தீத்தடுப்பு சாதனங்களும் உள்ளன என்றார்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 1,547 மையங்களலும் இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல்
வைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அவைகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும்
பணி விடிய, விடிய நடைபெற்றது. ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்புடன் அவைகள் கொண்டு செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.24 சதவீதம் வாக்குபதிவு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத்
தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 1 மணி நிலவரப்படி பரமக்குடியில் 38.78 சதவீதமும், திருவாடானையில் 38.70 சதவீதமும்,
ராமநாதபுரத்தில் 36.09 சதவீதமும், முதுகுளத்தூரில் சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாவட்டத்தில் மொத்தம் 37.43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
மாலை
5 மணி நிலவரப்படி பரமக்குடியில் 62.23 சதவீதமும், திருவாடானையில் 62.30 சதவீதமும்,
ராமநாதபுரத்தில் 50.04 சதவீதமும், முதுகுளத்தூரில் 58.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் 51.27 சதவீதமும் பேர் வாக்களித்திருந்தனர்.
இரவு
7 மணி நிலவரப்படி
பரமக்குடி
தொகுதியில் 70.51 சதவீதம்,
திருவாடானை
தொகுதியில் 68.75 சதவீதம்,
ராமநாதபுரம்
தொகுதியில் 67.51 சதவீதம்,
முதுகுளத்தூர்
தொகுதியில் 70.35 சதவீதம்
என
மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 3 லட்சத்து
76697 ஆண்களும், 4 லட்சத்து 29,999 பெண்களும் என மொத்தம் 8,05,701 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் 5 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.