Sunday, February 7, 2021
மார்ச் மாதம் முதல் மதுரை - ராமேஸ்வரம் பயணிகல் ரயில்!!
மதுரையிலிருந்து
ராமேசுவரத்துக்கு மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ராமநாதபுரம்
ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை
- ராமேசுவரம் பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.
மதுரையிலிருந்து
பயணிகள் ரயில் தினமும் காலை 5.25 மணிக்கு ராமேசுவரம் நோக்கி புறப்படும். அதேநேரத்தில்
ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில்,
கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020 ஏப்ரல் முதல் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து
ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது,
பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கும்,
திருச்சிக்கும் மட்டுமே தினமும் இரு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே,
ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, வர்த்தக
சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன.
இது
குறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் தெரிவித்தது:
மார்ச்
முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல், மாலையில் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.
இதற்காக, தண்டவாளம் கண்காணிப்பு, ஊழியர்கள் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.
செய்தி;
தினசரிகள்
கீழக்கரையில் மாமியாரை கொன்றதாக மருமகன் கைது!!
கீழக்கரையில்
மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றதாக மருமகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை அழவாய்கரவாடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி பொன்னம்மாள் (70). இவர்களது
மகள் ராமலட்சுமியை, கீழக்கரை லட்சுமிபுரம் இடிந்தகல்புதூரைச் சேர்ந்த மீனவர் முருகன்
(39) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
இந்நிலையில்,
முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே,
தனது மகளுக்கு துணையாக இரவில் அவரது வீட்டில் பொன்னம்மாள் தூங்கிவந்துள்ளார். வெள்ளிக்கிழமை
நள்ளிரவில், முருகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அதை தடுக்கச்
சென்ற பொன்னம்மாளை கத்தியால் முருகன் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில்
பலத்த காயமடைந்த பொன்னம்மாளை, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால்,
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இது
குறித்து ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை
கைது செய்தனர்.
செய்தி:
தினமணி
11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி டாக்டரிடம் ரூ.1.29 லட்சம் மோசடி!!
ஆன்லைன்
ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் ரூ.11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ராமநாதபுரத்தைச்
சேர்ந்த அரசு டாக்டர் ஸ்டேபனோ ஜோனதனிடம் 34, ரூ.1.29 லட்சத்தை ஏமாற்றிய நபர்களை போலீசார்
தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தானைச் சேர்ந்த இவர் தாமரைக்குளம் ஆரம்ப சுகாதாரநிலையத் தில் பணிபுரிகிறார். இவரது அலைபேசிக்கு ஜன., 27 ல் ஒரு அழைப்பு வந்தது. அதில் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ரூ. 11 லட்சம் பரிசு வென்றுள்ளதாக கூறினர். இது சம்பந்தமாக 09903617242 என்ற எண்ணில் பேசுமாறு கூறியுள்ளனர்.
அந்த
எண்ணில் பேசியபோது வரி மற்றும் பரிமாற்ற கட்டணங்களாக ரூ.1,29,300 செலுத்த கூறினர்.
அவர்கள் கூறியபடி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியும் பரிசுத்தொகை வரவில்லை.தனக்கு
பரிசுதொகை வேண்டாம் பணத்தை திரும்பத்தர டாக்டர் பேசியுள்ளார். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.
பின்னர் அலைபேசி சுவிச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. டாக்டரின் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.
செய்தி: தினசரிகள்