(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 7, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கவும், மீன் வளர்க்கவும் மானியத் திட்டத்தில் நிதி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் சங்கர்லால்குமாவத் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

மீன்வளர்ப்புக்கு மானியம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் 100 ஹெக்டேரில் செயல்படுத்திட மத்திய அரசானது ரூ. 69.88 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 0.5 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்து,

அதில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 50 சதவிகித மானியமும் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

எனவே திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment