(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 12, 2021

கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.

 

இதுகுறித்து மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட சதுரங்க கழகம் செயல்படுகிறது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 15 முறை சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

 


வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளன. 7, 9, 11, 13, 15 மற்றும் 25 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

 

பதிவுக்கட்டணம் உண்டு. போட்டிக்கான நுழைவுப் படிவங்கள் பெற்றுக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக் கழகத் தலைவர் எஸ். சுந்தரம் 9443610956,

கீழக்கரை மருந்தகம் 04567-241885,

சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் (சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி) 9443 408 096 ,8248 207 198 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் சிவப்பு ரிப்பன் கழக அலுவலகத்தில் அளிக்கலாம். வரும் 15 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.

 

அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment