(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 10, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகளை உடனுக்குடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

 


இயற்கை இடர்பாடுகள் தொடர்பான பாதிப்புகளை தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 

அதன்படி, பொதுமக்கள் தகவல்களை உடனுக்குடன்

இலவச தொலைபேசி எண் 1077, 04567-230060 மற்றும்

கைபேசி எண் 7708711334

 

ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment