Thursday, October 7, 2021
கீழக்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க CCTV கேமராக்கள்!!
கீழக்கரையில்
திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கீழக்கரை
பகுதியில் கடந்த 2 மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போதை பழக்கத்திற்கு
அடிமையான சமூக விரோதிகளால் குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்களிடையே ஏற்பட்டு
உள்ள திருட்டு அச்சத்தை போக்கவும், போலீசாருக்கு உதவும் வகையிலும் கீழக்கரை மேலத்தெரு
உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் சார்பில் வாக்கி-டாக்கி தகவல் பரிமாற்ற சாதன வசதியுடன்
6 தனியார் செக்யூரிட்டி காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது
மேலத்தெரு, சின்னக்கடை 500 பிளாட், சங்குவெட்டி தெரு ஆகிய பகுதிகளில் இரவு மற்றும்
பகல் நேரங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் இதேபோல் கிழக்குத்தெரு
ஜமாத்திற்கு சொந்தமான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களும் தெற்கு தெரு முஸ்லிம்
பொது நலச் சங்கத்தின் சார்பில் 4 கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
கண்காணிப்பு
கேமரா விரைவில் நகரின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இரவு நேர காவலர்களை நியமிக்க முடிவு
செய்து உள்ளனர். தற்போது மேலத்தெரு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு
செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிழக்குத் தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு,
தெற்கு தெரு ஜமாஅத், தெற்குதெரு முஸ்லிம் பொது நலச் சங்கம், மற்றும் உஸ்வதுன் ஹஸனா
முஸ்லிம் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி:
தினத்தந்தி
No comments :
Post a Comment