Wednesday, September 8, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சு. சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி தேசிய மக்கள் (லோக் அதாலத்) நீதிமன்றம் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுபடி மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். நீதிமன்றங்களில் 10 அமர்வுகளில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உதவியுடன், சமரசத்துக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இதில், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்பப் பிரச்னை, சமரச குற்ற வழக்குகளுக்கும் தீர்வு காணப்படும்.
இந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி, நீதிமன்றங்களில் நீண்டநாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ளக்கூடிய
வழக்குகளில் பொதுமக்கள் சமரசம் செய்து வழக்கை முடித்துக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment