Sunday, August 22, 2021
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க அவகாசம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள சிறப்பு சலுகையை தமிழக அரசு வழங்கி உள்ளது.
அந்த அரசாணையின்படி இந்த சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் வரும் 27-ந்தேதிக்குள் இணையம் வாயிலாக பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.
இணையம் மூலமாக http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப் படுகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment