Wednesday, August 25, 2021
16 மாதங்களுக்குப் பிறகு கலாம் தேசிய நினைவிடத்தை பார்வையிட அனுமதி!!
கரோனா
நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
தேசிய நினைவிடத்தில், 16 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிட
அனுமதிக்கப்பட்டனர்.
நாடு
முழுவதிலும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில்
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
ராமேசுவரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடமும் மூடப்பட்டது.
இங்கு சுமார் 16 மாதங்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.
இங்கு
அவரது நினைவு தினம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியப் பிரமுகர்கள் மட்டும்
அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில்,
நாடு முழுவதிலும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அப்துல்கலாம்
தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து, கைகளை
கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 15 மாதங்களுக்கு பின் கலாம் தேசிய நினைவிடத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்
பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
செய்தி:
தினமணி
No comments :
Post a Comment