Sunday, August 29, 2021
மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின
மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்
சீர்மரபின மாணவ, மாணவியருக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
எனவே
இதற்கான விண்ணப்பப்படிவங்களை மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று செப்.
30 ஆம் தேதிக்குள்ளும், புதிதாக விண்ணப்பிப்போர் நவ. 5 ஆம் தேதிக்குள்ளும் பூர்த்தி
செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்,
என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, August 25, 2021
16 மாதங்களுக்குப் பிறகு கலாம் தேசிய நினைவிடத்தை பார்வையிட அனுமதி!!
கரோனா
நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
தேசிய நினைவிடத்தில், 16 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிட
அனுமதிக்கப்பட்டனர்.
நாடு
முழுவதிலும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில்
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
ராமேசுவரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடமும் மூடப்பட்டது.
இங்கு சுமார் 16 மாதங்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.
இங்கு
அவரது நினைவு தினம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியப் பிரமுகர்கள் மட்டும்
அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில்,
நாடு முழுவதிலும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அப்துல்கலாம்
தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து, கைகளை
கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 15 மாதங்களுக்கு பின் கலாம் தேசிய நினைவிடத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்
பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
செய்தி:
தினமணி
ராமநாதபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை!!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது கொடைக்கான்வலசை.
இந்த ஊரை சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் ராஜேந்திரன் (வயது29). இவர் நேற்று இரவு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து
மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Sunday, August 22, 2021
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க அவகாசம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள சிறப்பு சலுகையை தமிழக அரசு வழங்கி உள்ளது.
அந்த அரசாணையின்படி இந்த சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் வரும் 27-ந்தேதிக்குள் இணையம் வாயிலாக பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.
இணையம் மூலமாக http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப் படுகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Monday, August 16, 2021
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!
மாற்றுத்திறனாளி
மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு
ரூ.1000 உதவித்தொகையும்,
6
ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ.3000 உதவித்தொகையும்,
9
ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கு ரூ. 4000 உதவித் தொகையும் மற்றும்
இளங்கலை
பட்டப்படிப்புக்கு ரூ. 5000 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
அதேபோல,
உயர்கல்வி (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) பயிலுவோருக்கு
ரூ.7000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை
பெறுவோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
கூடுதல்
விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண்: 04567-231410-இல் தொடர்பு கொள்ளலாம்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.