Sunday, June 27, 2021
ராமநாதபுரம் நகரிலிருந்து நாளை (ஜூன் 28) முதல் பேருந்து போக்குவரத்து!!
ராமநாதபுரம்
நகரிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள்
இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
கரோனா இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த
3 வாரங்களாக பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க
தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், ராமநாதபுரத்திலிருந்து மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு
பேருந்துகள் திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து
அதிகாரிகள் மேலும் கூறியது:
ராமநாதபுரத்திலிருந்து
மதுரை, திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு வழக்கம்
போல பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதே
நேரத்தில் தஞ்சாவூர், திருவாதவூர், பட்டுகோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு
பேருந்துகள் இயக்கப்படாது.
ராமநாதபுரம்
பகுதியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகள் எஸ்.பி.பட்டினம் வரை இயக்கப்படும்.
ராமநாதபுரம் நகர் பேருந்துகள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிகளைப் பின்பற்றி
இயக்கப்படும் என்றனர்.
செய்தி:
தினமணி
No comments :
Post a Comment